புதன், 30 அக்டோபர், 2013

சந்தானத்திற்கு எதிர்ப்பு


இப்போது வெளிவரும் படங்கள் பெரும்பாலும் பெண்களை கேவலமாக கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளது வருத்தத்திற்கு உரியது. அதிலும் பெண்களை கேலி செய்யும் வேலைகளை சந்தானம் ஒவ்வொரு படத்திலும் தவறாமல் செய்துவருகிறார்.



இவர்  படங்களிலும் இவர் ஹீரோவின் நண்பனாக இருந்துகொண்டு பெண்களை கேவலமாக பேசுகிறார். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூட அதையே தான் விரும்புகின்றனர். காதலில் பெண்கள் மட்டும் தான் ஏமாற்றி விடுவது போலவும் ஆண்கள்  எல்லாம் நல்லவர்களாக இருப்பது போலவும் இவர் வசனம் இடம் பெறுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது அப்போதெல்லாம் இதை எல்லாரும் தன வீட்டிலும் பெண்கள் இருகிறார்கள் என்பதை மறந்து பார்த்து சிரித்து இவரின் இந்த நடவடிக்கைக்கு மேலும் ஆதரவு தந்தனர். இநிலையில் என்றென்றும் புன்னகை படத்தில் இவர் ஒரு பெண்ணை பற்றி பேசிய வசனம்  முகம் சுளிக்க வைத்துள்ளது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் கேஸ் போட்டுள்ளனர். இது வரவேற்கதக்க ஒன்றாகும். இனிவரும் படங்களில் இவர் இது போன்று பேசாமல் இருப்பதற்கு இது ஒரு வழியாக அமையும்.



சந்தானம் மட்டுமல்லாமல் இப்போது வருகின்ற மற்ற படங்களிலும் பெண்களை பற்றிய கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள், கிண்டல் செய்யும் வகையில் காமடிகள் இடம் பெறுகின்றன. இப்போது அப்படி வருகின்ற நகைச்சுவை காட்சிகள் தான் அதிக அளவில ஹிட் ஆகின்றன. இதைவைத்து பார்த்தாலே தமிழ் நாட்டில் பெண்களை எந்த அளவுக்கு மதிகிறார்கள் என்று தெரியும். அதுமட்டும் இல்லாமல் பெண்கள் ஆண்களை  ஏமாற்றுவது போல பாடல்கள் இடம்பெறுவதும் காலகாலமாக நடந்துகொண்டு தான் இருகின்றன. இதை ஆனா வர்க்கமும் பேராதரவு தந்து வரவேற்றுகொண்டு தான் இருகின்றன. நாட்டில் கற்பழிப்பு அதிகாமாவது இதனால் தான். கர்ப்பழிப்பவனை மட்டுமே தவறு சொல்லும் இந்த சமூகம் அவன் அப்படி செய்வதற்கு காரணமான பெண்களை கேவலமாக சித்தரிக்கும் பட அதிபர்களையும், இயக்குனர்களையும் நடிகர்களையும் கண்டுகொள்வதே இல்லை.

ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் இருகிறார்கள் பெண்கள் பற்றி பேசும்போதும் அவர்களை கிண்டல் செய்யும்போதும் தன்  வீட்டில் உள்ள பெண்களையும் நினைத்துபார்க்கவேண்டும். அப்படி நினைகாததன் விளைவு தான் இன்று நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

நான் வலைப்பூ ஆரம்பித்த காரணங்கள்


வலைப்பூ தொடங்கியாச்சு முதல் பதிவு எதாவது ஒருப்படியா எழுதலாம்னு பாத்தா எதும் தோனல சரி அரம்பிச்சதையே ஒரு பதிவா எழுதலாம்னு தோனுச்சு அதுதான் இந்த பதிவு.



எனக்கு இணையதனத்துல செய்திகள் படிக்கிறது விமர்சனம் படிக்கிறது ஜோக்ஸ் படிக்றது இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். சரி எத்தன நாளைக்கு தான் மத்தவங்க எழுதறதையே படிக்கிறது நாமளும் எழுதுனா என்னனு தோனுச்சு ஆனா நமக்கு தான் எதும் எழுத வரதே நமக்கு எதுக்கு இந்த வெல்லாம் அப்படின்னு நெனச்சு விட்டுட்டேன்.



சமிபகாலமா வர பதிவுகள் விமர்சனம் பார்த்த யாரும் யோசிச்சு உபயோகமா எழுதுற மாதிரி தெரியல நான் காலைல பல்லு வெலக்கல, குளிக்கல இதெல்லாம் ஒரு பதிவா போட்டு நம்மள படிக்க வைக்கிறாங்க படத்துக்கு விமர்சனம் அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதுறாங்க அவங்களுக்கு பிடிச்ச ஹீரோ படம் மொக்கைய இருந்தாலும் உலக தரத்தில் ஒரு படம்னு விமர்சனம் பண்றாங்க அவகளுக்கு பிடிக்காத ஹீரோ படமா இருந்த நல்ல இருந்தாலும் குப்பைனு விமர்சனம் பண்றாங்க நீ மட்டும் புதுசா என்ன விமர்சனம் பண்ண போற அதையே தான பண்ண போறன்னு நீங்க நெனைக்கலாம் என்னங்க பண்றது நானும் உங்களில் ஒருத்தி அல்லவே!!!

அப்பறம் வரவர பதிவு போட்டாலே அது விஜய் அஜித் சம்பந்தமா தான் அதிகமா போடுறாங்க அது எப்படினே தெரியலங்க அஜித் ரசிகர்களுக்கு தலைவா கேவலமா இருக்கு ஆனா பில்லா 2 உலக தரமான படமா தெரியுது. விஜய் ரசிகர்களுக்கு அசல் மட்டமான படமா தெரியுது ஆனா வேட்டைக்காரன் படம் சூப்பர் படமா தெரியுது. அவங்களே பாவம் அவங்களுக்கு என்ன வருமோ அத வச்சு எதோ ட்ரை பண்றாங்க பாவம்னு படத்த  பாத்துட்டு போறத  விட்டுட்டு அதுல தான் இவர்களின் ஆறாவது அறிவையெல்லாம் காட்றாங்க. சரி அவகளுக்கு பிடிச்ச நடிகர அவங்க அடுத்த சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொல்லும் போது நம்ம ஏன் நமக்கு பிடிச்ச நடிகருக்கு சப்போர்ட் பண்ண கூடாதுன்னு தோனுச்சு அதுக்கு தான் இந்த வலைப்பூ.



அப்பறம் எனக்கு பிடிச்ச நடிகர் நடிப்பு திலகம் விஜய்( நோ நோ எமோஷன் ஓகே). அமாங்க நிஜ்ஜமவே எனக்கு விஜய் தான் பிடிக்கும்(சீரியசா பேசும்பொது என்ன சிரிப்பு என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ராஸ்கல்).
எதோ தலைவா அப்படின்னு  ஒரு உலக மகா காவியத்த எங்க அண்ணன் எடுதுட்டறு அதும் ஒரிஜினல் இயக்குனர் விஜய் மற்றும் சந்திரசேகரின் புண்ணியத்துல அதுக்காக அவர இப்படியா மாறி மாறி எல்லாரும் புகழுறது(என்னையா பண்ணான் என் கட்சிக்காரன்?).
எதோ ஒரு படாத தப்பா எடுத்துட்ட மனசுக்குள்ள திட்டிகிட்டு வெளியில குடுத்த காசுக்காக பரவாயில்ல அப்படின்னு சொல்லி மனச தேத்திகிறது தான தமிழர் பண்பாடு அதவிட்டுட்டு அவரே இந்த படத்த ரிலிஸ் பண்ண
 யார் கால்லையோ விழுந்து அழுது புரண்டாறு அந்த படத்த போய் இப்படி பண்ண அவரு திடிர்னு வித்தியாசமான கதைல நடிகிறேன்னு அடுத்த படத்துல அழகிய தமிழ் மகன் மாதிரி ஒரு படத்துல நடிச்சாருணா தமிழ் மக்களுடைய நிலைமையும் என்னை போன்ற அவருடைய ரசிகையின் நிலைமையும் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாக்க வேண்டாம்(அக்கா எப்படிக இப்படியெல்லாம்?? " நாங்கல்லாம் தொலைநோக்கு பார்வையோட யோசிப்போம்ல") ஆகவே இனிமே விஜய் படம் வந்தா அது மொக்கயாகவே இருந்தாலும் சரி படம் நல்ல இருக்கு விஜய் நல்ல நடிசிருக்காரு(கருமம்டா)
அப்படின்னு சொல்லி தமிழக மக்களை காப்பத்தனும். 




அடுத்தததாக நமது நடன சூறாவளி மைக்கல் ஜாக்சன் அஜித்( தங்கச்சி இந்த பேரு இதுவே கடைசியா இருக்கணும்) அவர்கள் பத்தி பேசுவோம் இவருடைய தனித்திறமை என்னன்னா ஒண்ணுமே இல்லாத கதைல இத பண்றேன் அத பண்றேன் டூப் போடாம பண்றேன்னு படம் ரிலிஸ் ஆகர வரைக்கும் ஒரு எதிர்ப்பர்ப அதிகரிச்சு கடைசில படம் பாத்தா நம்ம கண்ண கலங்க வைக்கிற மாதிரி இருக்கும்(அட சென்டிமென்ட்ல இல்லங்க காமடில) பாவம் அவரே பல வருடங்களுக்கு ஒரு ஹிட் படம் கொடுத்து தனக்கு பின் வந்த நடிகர்களுக்குலாம் முன்னிடம் கொடுத்து உயர்த்தும் பெருந்த மனப்பான்மை உடையவர் அவர போய் இந்த விஜய் ரசிகர்கள் கிடல் பண்றாங்க அவரு எவ்வளவு நல்லவரு தெரியுமா படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் அதுக்கு ஒரு பேட்டி கொடுப்பாரு  பாருங்க உலக தரத்தில் இருக்கும் அவரது பேட்டி. அவர் பேட்டிய கேட்டு இதுவரைக்கும் நாலு நாய் செத்துப்போச்சு 2 மாடு செத்துப்போச்சு அது முக்கியம் இல்ல அவரது ரசிகர் ஒருத்தர் அதற்கு பதில் கமெண்ட் பண்ணுவாரு பாருங்க அது தாங்க உண்மைலேயே ரொம்ப செண்டிமனான ஒன்னு அத படிக்கும் போது உங்கள் கண்கள் உங்கள அறியாமலே கலங்கும். அந்த செண்டிமன்டான ரசிகருக்ககவாது நாம படத்த பார்த்து அஜித் நல்ல நடந்துருக்கரு ச்சீ இல்ல நடிச்சிருக்காருன்னு சொல்லணும்.

மேல குறிப்பிட்டது போன்ற சில மகத்தான கடமைகளை செயல் படுத்த தான் நான் இந்த வலைப்பூவை தொடங்கினேன் என்பதை பேரன்புடனும் பெருமகிழ்ச்சியுடனும் தெரிவித்துகொள்கிறேன்.

( இதெல்லாம் சரி அக்கா பதிவுக்கு சம்பந்தம் இல்லாம படம் போட்டிருக்கீங்களே அது என்ன?)

அதுவா முதல் பதிவு புரட்சிகரமா இருக்கனும் இல்லையா பதிவு தான் புரட்சியா போடா முடியல(போட தெரியாது) அதனால தான் படங்களாவது புரட்சியா இருக்கணுமே அப்படின்னு நெனச்சு போட்டேன்.... ஹேய் அழகூடாது நோ நோ தப்பு...